சுடச்சுட

  

  சேப்பாக்கத்தில் சின்னத்திரை இயக்குனர்கள் போராட்டம்

  By DIN  |   Published on : 10th February 2019 12:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amera

   

  சென்னை: தமிழ் சின்னத்திரை உலகில் பணிபுரியும் உதவி இயக்குனர்களுக்கு முறையான சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

  அதிகரித்து வரும் தொலைக்காட்சி தொடர்களின் புகழுக்கு ஏற்ப நடிகர் மற்றும் நடிகைகள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர். இதனால் திரைக்குப் பின்னால் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் ஆகியோருக்கு முறையான சம்பளம் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வெகு காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் சின்னத்திரை இயக்குனர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி சின்னத்திரை இணை மற்றும் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை இயக்குனர் பாக்யராஜ் துவக்கி வைத்தார். இயக்குனர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பாக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai