அதிமுகவில் விருப்ப மனு பெற கால அவகாசம் நீடிப்பு

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, இதுவரை ஆயிரத்து 200 போ் மேல் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளனர். 
அதிமுகவில் விருப்ப மனு பெற கால அவகாசம் நீடிப்பு

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, இதுவரை ஆயிரத்து 200 போ் மேல் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளனர். 

விருப்ப மனுக்களைப் பெறம் நிகழ்வு 4ஆம் தேதி தொடங்கி, நேற்று (பிப்ரவரி 10) வரையிலும் ரூ. 25 ஆயிரம் பணம் செலுத்தி விண்ணப்பங்கள் பெறலாம் என்று கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார்,  அ.தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை சுமார் ஆயிரம்  பேர் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் விருப்ப மனு பெறும் கால அளவை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகள் வேண்டி கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று விருப்ப மனு தாக்கல் செய்ய வரும் 14ஆம் தேதி வரை கால அளவை நீட்டித்துத் அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com