சுடச்சுட

  

  ஓசூர் மற்றும்  நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல்

  By DIN  |   Published on : 13th February 2019 10:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamil-nadu-secretariat-


  சென்னை : ஒசூர் மற்றும்  நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கலாகிறது.

  தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், நாகர்கோவில் மற்றும் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

  இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் நாகர்கோவில் மற்றும் ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்கிறார். 

  மேலும், நெகிழி தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கான சட்டமசோதாவும் இன்று சட்டப்பேரவையில் தாக்கலாகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai