சுடச்சுட

  
  rush

  நைஜீரியாவில் நடந்த தேர்தல் பிரசார வன்முறையில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர்.  

  நைஜீரியா அதிபராக பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, வருகிற பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

  ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பெரிய நாடான நைஜீரியாவில், 15 கோடி பேர் மேல் வசிக்கின்றனர். இதில் முகமது புஹாரியும், நைஜீரியா முன்னாள் துணை அதிபர் அட்டிக்கு இடையே போட்டி நிலவுகிறது. 

  தேர்தலை முன்னிட்டு அதிபர் முகமது புஹாரி தலைமையில் பிரசார பேரணி நடைபெற்றது. அப்போது அவரது பார்ப்பதற்காக பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியேறிதால், கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

  மேலும் படுகாயம் அடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai