சுடச்சுட

    

    பாஜக தலைவர் அமித்ஷா நாளை ஈரோடு வருகை: தமிழிசை சௌந்திரராஜன் 

    By DIN  |   Published on : 13th February 2019 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tamilisai

     

    சென்னை: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு பஜக தலைவர்கள் தொடர்ந்து சென்று வருகிறார். அந்த வகையில் கடந்த 10ஆம் தேதி பிரதமர் மோடி திருப்பூர் வருகை தந்தார். அப்போது புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பிறகு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். 

    அதை தொடர்ந்து தற்போது பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஈரோட்டிற்கு வரவுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், நாளை ஈரோடு வரும் அமித் ஷா, அங்கு நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தாா்.

    மேலும் பாஜக தலைவர்களின் வருகை மக்களவை தேர்தலை வலிமையுடன் எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்றார் தமிழிசை சௌந்திரராஜன். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai