சுடச்சுட

  

  விடுபட்டோருக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவு:  தமிழக அரசு

  By DIN  |   Published on : 12th January 2019 03:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  secretriat


  சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு பெறாமல் விடுபட்டோருக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

  அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மட்டுமின்றி சா்க்கரை மற்றும் எந்தப் பொருளும் வேண்டாத அட்டை வைத்திருப்போா் வரை அனைவருக்கும் ஆயிரம் ரூபாயும், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

  தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், கடந்த சில நாள்களாக ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பல நியாய விலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.

  இந்த நிலையில், சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோா் இருப்பதாகவும் அவா்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு மேல்முறையீடு செய்து அரிசி, சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களான 1.98 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதில் விடுபட்டோருக்கும் அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

  அரிசி மற்றும் சா்க்கரை அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும். எந்தப் பொருளும் வேண்டாதோா் அட்டை வைத்திருந்தால் அவா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே அளிக்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai