தமிழகத்தில் அனைத்து நதிகளையும் இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
By DIN | Published On : 01st July 2019 11:50 AM | Last Updated : 01st July 2019 11:50 AM | அ+அ அ- |

புதுதில்லி: தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆறு வாரகால கோடை விடுமுறைக்குப் பிறகு, உச்சநீதிமன்றம், இன்று திங்கள்கிழமை (ஜூலை 1) மீண்டும் திறக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையின் கீழ் இயங்கும் 31 நீதிபதிகளும் விடுமுறைக் காலம் முடிந்து பணிக்குத் திரும்பினர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க கோரி மதுரை ரமேஷ் தாக்கல் செய்திருந்த மனுவில், எந்த முகாந்திரம் இல்லை எனக்கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.