குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுகதான்: ஹெச். ராஜா ஆவேசம்

குடிநீர் பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம் என்று நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா
குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுகதான்: ஹெச். ராஜா ஆவேசம்


சென்னை: குடிநீர் பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம் என்று நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், குடிநீர் பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம் என்று நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். திமுக 67-இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொடுத்துள்ள பொறுப்பற்ற ஆட்சியே காரணம். சென்னை மற்றுமல்ல தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் அழிப்பு. நீர்நிலையின் மீதுதான் மதுரையில் உயர்நீதிமன்ற கிளை. வெட்கக்கேடு என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காளை மற்றும் எருது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்த்தது, நெடுவாசல், மீத்தேன், நீட் தேர்வு, கர்நாடகா காவிரியில் தமிழகத்தை கேட்காமல் அணைகள் கட்டியது, கச்சத்தீவை தாரை வார்த்தது இவை அனைத்தும் திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இன்று கோரிக்கை, போராட்ட வேஷமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

வருண ஜெபம் செய்ததைத் தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்துள்ள போது திமுகவின் பிரசார யுக்தியை பரப்புவதை கடமையாக கொண்டுள்ள ஊடகங்கள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com