உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வெளியிடுவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் 5 மாநில மொழிகளில் வெளியிடப்படும் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாது என்பது ஏமாற்றமளிக்கிறது.

உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான உதவிகளையும், கட்டமைப்புகளையும் தமிழக அரசிடமிருந்து உச்ச நீதிமன்றம் கேட்டுப் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com