தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் 

தமிழகம் முழுவதும் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த தனியார் தண்ணீர் லாரிகள்
தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் 


சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் அறிவித்துள்ளார்.

நிலத்தடி நீரை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். நிலத்தடி நீரை கனிம வளப் பிரிவில் சேர்த்துள்ளதால் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நிலத்தடி நீரை பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் தொடர்பான தடையை நீக்க வேண்டும். கனிம வளப்பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மே 27  முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் சூழ்நிலை உருவானது. 

இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்படுவதாகவும் தற்போது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். 

இந்நிலையில், லாரிகளில் தண்ணீர் எடுக்க இடமில்லை என்பதாலும், தண்ணீர் கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழும்புரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய சங்கத்தினர், பருவமழை பொய்த்ததாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டதாலும் மக்கள் கடும் குடிநீர்ப் பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர். லாரி தண்ணீருக்காக மக்கள் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. தண்ணீர் கிடைக்கும் இடத்தை காட்டினால், தண்ணீர் எடுத்து மக்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளோம் என்றும், தண்ணீர் எடுக்கும் இடத்தில் போதிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் சூழ்நிலை உருவானது. 

இந்நிலையில், அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் போதிய பாதுகாப்பு அளிப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் நாளை தொடங்கவிருந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி சங்கத் தலைவர் நிஜலிங்கம் அறிவித்துள்ளார். 

போராட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ளதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  குடிநீர் பிரச்னை சீராகும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com