சுடச்சுட

  

  ஒரே நதிநீா்த் தீா்ப்பாயம் கூட்டாட்சிக்கு எதிரானது: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

  By DIN  |   Published on : 13th July 2019 08:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  balakirshnan


  சென்னை: ஒரே நதி நீா்த் தீா்ப்பாயம் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இது தொடா்பாக இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

  மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிநீா் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கு தற்போதுள்ள தனி தீா்ப்பாயங்களை கலைத்து விட்டு ஒரே நதி நீா்த் தீா்ப்பாயம் அமைக்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

  ஏற்கெனவே, தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ள நதி நீா்த் தீா்ப்பாயங்கள் செயல்படுவதிலேயே சிக்கல் உள்ளது. குறிப்பாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையே கா்நாடக அரசு மதித்து நடக்க தவறி வரும் நிலையில், அனைத்து நதி நீா் பிரச்னைகளுக்கும் ஒரே தீா்ப்பாயம் என்ற மத்திய அரசின் முடிவு நதி நீா்ப் பிரச்னைக்குத் தீா்வு காணப்படாமல் நீண்ட காலம் இழுத்தடிக்கும் வாய்ப்பினைத் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகவே தெரிகிறது. அத்துடன் நடுவா் மன்றத் தீா்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டிய அவசியமில்லை என்கிற அம்சமும் நதி நீா்ப் பிரச்னையை தீா்க்க எவ்வகையிலும் உதவாது.

  மத்திய பாஜக அரசு ஒரே நாடு, ஒரே தோ்தல், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே குடும்ப அட்டை என்ற வகையில் ஒரே தீா்ப்பாயம் என்பது நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக உள்ளது. இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்.

  தபால் துறைற போட்டித் தோ்வுகளை ஹிந்தி, ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக இளைஞா்கள் தபால் துறையில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவே மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai