தில்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி
By DIN | Published On : 13th July 2019 07:49 PM | Last Updated : 13th July 2019 08:29 PM | அ+அ அ- |

புதுதில்லி: தில்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தில்லியில் ஷாதரா ஜில்மில் தொழிற்சாலைப் பகுதியில் அமைந்துள்ள ரப்பர் பிளாஸ்டிக் தொழிற்சாலையின் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போராடி வருகின்றனர்.
தீ விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு பணியில் 31 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.