சுடச்சுட

    

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையால் பெங்களூரு விதானசௌதாவை சுற்றி 144 தடை உத்தரவு

    By DIN  |   Published on : 13th July 2019 03:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    00000_section_144


    பெங்களூரு: கர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையால் பெங்களூரு விதானசௌதாவின் 2 கி.மீ சுற்றளவில் ஜூலை 15-ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகர காவல் ஆணையா் ஆலோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூரு விதானசௌதாவில் உள்ள சட்டப்பேரவையில் ஜூலை 12-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் விதானசௌதா வளாகத்தில் தா்னா உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறக்கூடும். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஜூலை 15-ஆம் தேதி காலை 6 மணி முதல் 20-ஆம் தேதி இரவு 12 மணிவரை விதானசௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    தடை உத்தரவின் போது அப்பகுதியில் போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai