சுடச்சுட

  

  மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆா்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 13th July 2019 03:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cong


  கா்நாடகாவில் ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிப்பதாக கூறியும், கர்நாடகத்தில் நடைபெரும் ஜனநாயக படுகொலையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னையில் காங்கிரஸ் கட்சியினா் இன்று சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

  கர்நாடகத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் வள்ளுவர் கோட்டத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 13) நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் இதில், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்ஜய் தத் அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார். 

  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சி.டி. மெய்யப்பன்,  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ். திரவியம்,  வீரபாண்டியன் மற்றும் மாநில நிர்வாகிகள், பிரிவுகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai