மேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் தஞ்சமடைகிறார்கள்? - முகுல் ராய் பேட்டி

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில்
மேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் தஞ்சமடைகிறார்கள்? - முகுல் ராய் பேட்டி


கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த முகுல் ராய் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலில் கர்நாடகம் மற்றும் கோவா மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்து இந்திய அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த முகுல் ராய் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகவும், அவர்களின் பெயர் பட்டியல் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தவர் முகுல் ராய் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com