பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறினால் தகுந்த பதிலடியுடன் முறியடிப்போம்: ராணுவத் தளபதி பிபின் ராவத்

பாகிஸ்தான் ராணுவம் எந்தவொரு தவறான செயலில் ஈடுபட்டாலும் தகுந்த பதிலடியுடன் விரட்டப்படுவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்று
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறினால் தகுந்த பதிலடியுடன் முறியடிப்போம்: ராணுவத் தளபதி பிபின் ராவத்


புதுதில்லி: பாகிஸ்தான் ராணுவம் எந்தவொரு தவறான செயலில் ஈடுபட்டாலும் தகுந்த பதிலடியுடன் விரட்டப்படுவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.  

கடந்த 6 ஆம் தேதி திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் 84 ஆவது பிறந்த தினத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீரின் லே மாவட்டத்தில் இந்தியாவின் லடாக்கையும், சீனாவின் திபெத்தையும் இணைக்கும் பகுதியில் டெம்சோக் என்ற கிராம பகுதியில் சிலர் திபெத் கொடியை ஏற்றியதாக சொல்லப்படுகிறது. இதற்கு சீனப் பகுதியில் இருந்து சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சீனாவின் பகுதியாக உள்ள திபெத்தை பிரிவினை செய்யும் நடவடிக்கைகளை தடை செய்யுமாறு சீன மொழியில் எழுதப்பட்ட பதாகையை அவர்கள் உயர்த்திப்பிடித்ததாகவும். அப்படி வந்தவர்கள் சாதாரண உடையில் இருந்த சீன ராணுவ வீரர்கள் என்றும், 40 நிமிடங்கள் அங்கு பதாகையை பிடித்தவண்ணம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. 
 
இந்நிலையில், கார்கில் போர் முடிந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி பிபின் ராவத் பங்கேற்று பேசுகையில், பாகிஸ்தான் ராணுவம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் அத்துமீறல்கலில் ஈடுபட்டு வருகிறது. நமது ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் எந்தவொரு தவறான செயலில் ஈடுபட்டாலும் தகுந்த பதிலடியுடன் முறியடிக்கப்பட்டு விரட்டப்படுவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக வெளியான தகவல் உண்மை இல்லை. இந்தியாவின் டெம்சோக் பகுதியில், சில திபெத்தியர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாவும், எல்லைக்கு அப்பாலிருந்து அந்த கொண்டாட்டங்களை பார்க்க சிலர் வந்ததாகவும், அப்போது என்ன நடக்கிறது என்பதை சில சீனர்களும் காண வந்தனர். மற்றபடி எந்தவிதமான ஊடுருவலும் நிகழவில்லை. அனைத்தும் இயல்பாகவே இருந்தது. 

எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு இருப்பதால் எந்த விதமான அச்சமும் தேவையில். இருப்பினும், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வரை வந்தவர்கள் சீன ராணுவத்தின் உதவியின்றி வந்திருக்க முடியாது என்றும் பிபின் ராவத் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com