சுடச்சுட

  
  ROCKET

  சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3- எம் 1ராக்கெட்.


  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சந்திரயான்-2 விண்கலம்  வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை)  விண்ணுக்குச் செலுத்தப்படவிருக்கிறது.

  அதிக எடையை விண்ணுக்குத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டதுடன் முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 2.51 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

  இது இந்தியாவின் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க பணியாகும். விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் சுமார் 45 நாள்கள் பயணித்து, செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை அடையும். நிலவின் தென் துருவத்திலுள்ள இரண்டு மிகப் பெரிய பாறைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை தரையிறக்கப்படுகிறது. 

  இந்த விண்கலத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் "ரெட்ரோ ரிப்ளெக்டர்' என்ற கருவியையும் சந்திரயான் -2 நிலாவுக்கு கொண்டு செல்ல உள்ளது. 

  இதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தில் சந்திராயன் - 2 தனது தடத்தை பதிக்கவுள்ளது. இதுவரை எந்த நாடும் இதற்காக முயற்சியில் இறங்கவில்லை. இந்த முயற்சியானது நிலவு குறித்த அறிவியலில் நிறைய புதிய வெளிப்பாடுகளை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai