தமிழகத்தில் புதியதாக 2 மாவட்டங்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு
By DIN | Published On : 18th July 2019 10:36 AM | Last Updated : 18th July 2019 10:36 AM | அ+அ அ- |

சென்னை: தமிழகத்தில் புதியதாக தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் இன்று முதல்வர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவையில் இன்று வருவாய்த்துறை அறிவிப்பின் கீழ் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிய தென்காசி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றும் வகையில் முதல்வர் பழனிசாமி திருநெல்வேலியில் இருந்து பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து செங்கல்பட்டை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தின் கீழ் சிவகிரி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டாரங்கள் வரும் என தெரிகிறது.
கடந்த பேரவைத் தொடரின் போது விழுப்புரம் தமிழகத்தின் 33ஆவது மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிர்வாக வசதிக்காக 34ஆவது மாவட்டமாக தென்காசியும், 35 ஆவது மாவட்டம் செங்கல்பட்டும் உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.