சுடச்சுட

  

  புனே தேசிய நெடுஞ்சாலையில் கார்-லாரி மோதி விபத்து: 9 பேர் பலி

  By DIN  |   Published on : 20th July 2019 11:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  road_accident

     
  புனே தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

  மகாராஷ்ர மாநிலம் புனேயில் இருந்து சோலாப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் கடம்வாக் வஸ்தி என்ற இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஏதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 
   
  இந்த கோரவிபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

  தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உயிரிழந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் 19 முதல் 23 வயதுக்குற்பட்டவர்கள். 

  விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai