தமிழகம் வந்தடைந்தது காவிரி நீர்!
By DIN | Published On : 22nd July 2019 08:38 AM | Last Updated : 22nd July 2019 09:15 AM | அ+அ அ- |

பெங்களூரு: காவிரியாற்றில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து காவிரியாற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து விநாடிக்கு 4,800 கனஅடி நீரும், கபினியிலிருந்து 3,500 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் கர்நாடகா திறந்துவிட்ட உபரிநீர் இன்று காலை நிலவரப்படி, 800 கனஅடியாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. முழுமையான உபரிநீர் பிலிகுண்டுலுவிற்கு இன்று மாலைக்குள் வந்தடையும் என்றும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ந்து வருவதால் வரும் நாட்களில் திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிகின்றன.