ஆர்டிஐ சட்டத்திருத்த திருத்த மசோதா மூலம் மக்களின் உரிமையை பறிக்க அரசு முயற்சி: சோனியா காந்தி  

ஆர்டிஐ சட்டத்திருத்த திருத்த மசோதா மூலம் மக்களின் உரிமையை பறிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ஆர்டிஐ சட்டத்திருத்த திருத்த மசோதா மூலம் மக்களின் உரிமையை பறிக்க அரசு முயற்சி: சோனியா காந்தி  

புதுதில்லி: ஆர்டிஐ சட்டத்திருத்த திருத்த மசோதா மூலம் மக்களின் உரிமையை பறிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) திருத்தம் கொண்டுவரும் மசோதா, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் திங்கள்கிழமை நிறைவேறியது. 

தகவல் அறியும் உரிமைச் சட்ட (திருத்த) மசோதா 2019-ஆனது, தகவல் ஆணையர்களின் நியமனம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள், அவர்களின் பதவிக்காலம், அவர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயிப்பதற்கு அதிகாரமளிக்க வகை செய்கிறது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தவே சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அதிகாரத்தை ஒழுங்குமுறைப்படுத்தவும், அதிலுள்ள குறைகளைக் களையவும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது என்று ஜிதேந்திர சிங் கூறியிருந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் சோனியா காந்தி விடுத்துள்ள அறிக்கையில், ஆர்டிஐ சட்டத்திருத்த திருத்த மசோதா மூலம் மக்களின் உரிமையை பறிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும், ஆர்டிஐ சட்டத்தை ஒரு இடையூறாக அரசு பார்க்கிறது.

மக்களுக்கு தகவல் அறியும் உரிமை அளிக்கும் இந்த சட்டம் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக நீண்ட விவாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சட்டத்தில் 69 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். ஏழை மக்கள் தங்களின் உரிமைகளை இந்த சட்டத்தின் மூலம் கேட்டு பெற்றிருக்கிறார்கள். 

இந்த நிலையில், தற்போதைய மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை(ஆர்டிஐ) ஒரு தொல்லையாக பார்ப்பதால் அதன் சுதந்திரத்தை பறிக்க முயற்சி செய்கிறது. மத்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய விஜிலென்ஸ் ஆணையத்திற்கு இணையாக இருந்த மத்திய தகவல் ஆணையத்தின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை அழிக்க விரும்புகிறது என்பது தெளிவாகிறது.

மக்களவையில் உள்ள பெரும்பான்மை மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவும், ஆர்டிஐ சட்டத்தை அதிகாரமற்றதாக வளைக்க முயற்சிப்பதும் மத்திய அரசு முயல்கிறது. ஆனால் அது மக்களின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com