Enable Javscript for better performance
தில்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    meet


    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் இன்று வியாழக்கிழமை தில்லியில் நடைபெற உள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் காவிரியில் கர்நாடக அரசு மொத்தம் 177.25 டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும். அதன்படி, ஜூன் மாதத் தவணையாக 9.19 டிஎம்சி நீர் வழங்கப்பட வேண்டும். 

    அதற்கேற்ப, ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை உறுதி செய்துள்ள ஆணையம், மாதந்தோறும் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறது. 

    நடப்பு நீர் வழங்கும் காலம் ஜூன் மாதம் தொடங்கியதால், முதல் கூட்டம் மே மாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஜூன் மாதம் நடைபெற்ற காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் ஜூன் மாதத்திற்கான நீரை கர்நாடக அரசு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் வலியுறுத்தினர். 

    இந்நிலையில், தில்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் அலுவலகத்தில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தில் நடப்பாண்டுக்கான மூன்றாவது கூட்டம் அதன் தலைவர் எஸ். மசூத் ஹுசேன் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காவிரி நதி நீர் பயன் பெறும் மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் பிரதிநிதிகள் தில்லி சென்றுள்ளனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai