Enable Javscript for better performance
மாநிலங்களவை எம்.பி.யாக வைகோ பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    
    vaiko


    புதுதில்லி: மாநிலங்களவை எம்.பி.யாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று பதியேற்றுக்கொண்டார்.

    தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் வா.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து ஐந்து பேருக்கு பிரிவுபசார நிகழ்வு மாநிலங்களவையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.  

    இந்நிலையில், தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான உறுப்பினர்கள் 6 பேரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். 

    திமுக கூட்டணியில் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதவியேற்றுக்கொண்டார்.  வைகோ பதவியேற்பின்போது இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என தமிழில் உறுதிமொழி கூறி  பதவியேற்றுக்கொண்டார்.

    மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக சார்பில் சண்முகம், வில்சனும், அதிமுக சார்பில் சந்திரசேகர், முஹம்மத் ஜான் ஆகியோரும், அதிமுக கூட்டணி சார்பில் பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் பதவியேற்றுக் கொண்டனர்.

    அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai