Enable Javscript for better performance
ரூட் தல மாணவர்கள் தொல்லையா..? வாட்ஸப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தற்போதைய செய்திகள்

    ரூட் தல மாணவர்கள் தொல்லையா..? வாட்ஸப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்!

    By DIN  |   Published On : 30th July 2019 09:24 AM  |   Last Updated : 30th July 2019 09:24 AM  |  அ+அ அ-  |  

    bus


     ‘ரூட் தல’ என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் பற்றி 9087552233 என்ற வாட்ஸப் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை அரும்பாக்கத்தில் அரசு பேருந்தில் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த 23-ம் தேதி பட்டாக் கத்தியுடன் மோதிக் கொண்டனர். இச் சம்பவத்தில் ஒரு மாணவர் பலத்தக் காயமடைந்தார்.  இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 6 மாணவர்களை கைது செய்தனர்.

    இதேபோல மாணவர்கள் பொது இடங்களில் இடங்களில் மோதிக் கொள்வதை தடுக்கும் வகையிலும், பேருந்து வழித்தட அடிப்படையில் மாணவர்கள் தகராறு, அடிதடியில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. இதில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கையும் விடுத்தது.

    மேலும் பிரச்னைக்கு காரணமாக இருக்கும் அரசு பேருந்துகளில் வரும் ரூட் தல எனப்படும் 90 மாணவர்களை  அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எனவும், கல்லூரி மாணவர்களை வன்முறைக்கு தூண்டும் முன்னாள் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது எனவும் காவல்துறை முடிவு செய்தது.

    இதன்படி, ரூட் தல மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீதும் குற்ற  விசாரணைமுறைச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடம் 6 மாதங்களுக்கு எவ்வித தவறுகளிலும் ஈடுபடமாட்டோம், மீறி ஈடுபட்டால் கைது செய்து, சிறையில் அடைக்கலாம் என உறுதி மொழி பத்திரத்தை பெற்று வருகின்றனர். இதில் கடந்த சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் 58  மாணவர்களிடம் உறுதி மொழி பத்திரம் பெறப்பட்டது. 

    சென்னை மாநகரில், 'ரூட் தல' என்ற பெயரில், கல்லூரி மாணவர்களின் அட்டகாசத்திற்கு முடிவு கட்டும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, ரூட் தல மாணவர்கள் என்ற பெயரில் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க 90875 52233 என்ற வாட்ஸப் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. 

    அதேபோல சென்னை காவல்துறையின் அதிகாரபூர்வமான http://www.facebook.com/chennaipolice , https://www.twitter.com/chennaipolice  என்ற ஃபேஸ்புக், டிவிட்டர் சமூக வலைதளங்களிலும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரி மாணவர்களின் அட்டகாசத்திற்கு முடிவு கட்டும் வகையில், மாநகர போலீஸார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp