ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்: இந்திய ராணுவம் தகுந்த பதிலடி

வடக்கு காஷ்மீரின் தாங்கார் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியருகே இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்: இந்திய ராணுவம் தகுந்த பதிலடி


வடக்கு காஷ்மீரின் தாங்கார் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியருகே இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் காயமடைந்துள்ளனர். 

வடக்கு காஷ்மீரின் தாங்கார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் காயமடைந்துள்ளனர். 

முன்னதாக, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியருகே இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் 10 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் 2 பேர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து திங்கள்கிழமையும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. தற்போது தொடர்ந்து 3-ஆவது நாளாக  ரஜெளரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 

இந்நிலையில், இன்று புதன்கிழமை 4-ஆவது நாளாக வடக்கு காஷ்மீரின் தாங்கார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.  இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com