ஆவின் பால் விலை உயர்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தனியார் பால் விலையை தொடர்ந்து ஆவின் பால் விலையும் விரைவில் உயர உள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஆவின் பால் விலை உயர்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


சென்னை: தனியார் பால் விலையை தொடர்ந்து ஆவின் பால் விலையும் விரைவில் உயர உள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று முதல் தனியார் பால் விலை உயர்வு லிட்டருக்கு இரண்டு ரூபாய் விலை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 1 லிட்டர் பால் ரூ.56 ஆகவும், சமன் படுத்தப்பட்ட 1 லிட்டர் பால் ரூ.44 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.50 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.54 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது

தனியார் பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து ஆவின் பால் விலையும் விரைவில் உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சப்பட்டனர். 

மக்கள் பயந்ததை போலவே தற்போது பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் பால் விலையை உயர்த்துவது பற்றி பேசியுள்ளார்.

இந்நிலையில், உலக பால் தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பொதுமக்களை பாதிக்காத வகையில் பால் விற்பனை விலையை உயர்த்த தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், முதல்வரிடம் பேசி ஆவின் பால் கொள்முதல் விலையை, விரைவில் உயர்த்த உள்ளதாக கூறினார்.

கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. அதனால் இந்த சூழலுக்கு ஏற்றவாறு தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியிருக்கின்றன. பால் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள செந்தில் பாலாஜி, நாம் எப்போதும் விலை உயர்வை பற்றி பேசுகிறோம். நடைமுறையையும் சிறிது யோசித்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com