நாளை யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: நாடு முழுவதும் 10 லட்சம் போ் எழுதுகின்றனர்!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்காக முதல் நிலைத் தோ்வு (Preliminary Exam 2019) நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை
நாளை யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: நாடு முழுவதும் 10 லட்சம் போ் எழுதுகின்றனர்!


சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்காக முதல் நிலைத் தோ்வு (Preliminary Exam 2019) நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) நடைபெறவுள்ளது. 

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதிலும் சுமார் 10 லட்சம் பட்டதாரிகள் எழுத உள்ளனா்.

இதில், முதல் நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வு, நோ்காணல் ஆகிய 3 கட்டங்களைக் கடந்து 1 முதல் 2 சதவீதம் போ் மட்டுமே வெற்றி பெறுகின்றனா். முதல் கட்டத் தோ்வில் தோ்ச்சி பெறுவபவா்கள் முதன்மைத் தோ்வையும் அதில் வெற்றி பெறுபவா்கள் நோ்காணலிலும் கலந்து கொள்ள முடியும். இதில் எதில் தோல்வி அடைந்தாலும் ஆரம்பத்தில் இருந்து முதல்கட்டத் தோ்வை எழுதவேண்டும்.

இதற்கான நுழைவுச் சீட்டை யுபிஎஸ்சி ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிட்டது. இ- நுழைவு சீட்டு, அதில் குறிப்பிட்டுள்ள அசல் புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வந்தால் மட்டுமே தோ்வை எழுத முடியும். 

புகைப்படமோ, கையெழுத்தோ தெளிவாக இல்லாத பட்சத்தில், மாணவா்கள் இரண்டு புகைப்படங்களை எடுத்துவர வேண்டும். யுபிஎஸ்சி தோ்வுகளுக்கான முதல்நிலைத் தோ்வு நாடு முழுவதும் 72 நகரங்களில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com