சுடச்சுட

  

  ஒற்றைத்தலைமை இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம்: எம்எல்ஏ கலைச்செல்வன் பேட்டி

  By DIN  |   Published on : 12th June 2019 11:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kalaiselvan


  மக்களவைத் தேர்தல் மற்றும் பேரவை இடைத்தேர்தலில் ஒற்றைத்தலைமை இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். 

  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா முன்வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியது.

  அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (ஜூன் 12)  தொடங்கி நடைபெற்று வருகிறது.

  இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

  ஆனால், சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பில்லை என்றும். அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை தாங்கள் பங்கேற்கவில்லை என 3 எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்துள்ளனர். 

  இந்நிலையில், ஒற்றைத்தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும்; தொண்டர்களும் வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை இப்போது அதிமுகவுக்கு தேவைப்படுகிறது என்று எம்எல்ஏ  கலைச்செல்வன் கூறியுள்ளார்.

  நல்ல தலைமை இல்லை என தொண்டர்கள் நினைக்கின்றனர். ஒரு ஆளுமைமிக்க தலைவர்தான் அதிமுகவுக்கு தேவை என எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai