விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்
By DIN | Published On : 14th June 2019 09:37 AM | Last Updated : 14th June 2019 10:04 AM | அ+அ அ- |

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 67.
புற்றுநோய் பாதிப்பு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாமணி திமுக மாவட்ட அவைத்தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது
ராதாமணியின் மறைவுக்கு திமுக-வினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.