சென்னை எண்ணூரில் ரவுடிகள் இடையே மோதல்: துப்பாக்கியுடன் ரவுடி கைது
By DIN | Published On : 18th June 2019 09:55 AM | Last Updated : 18th June 2019 09:55 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை எண்ணூரில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் துப்பாக்கியால் சுட்ட ரவுடி ரமேஷ் கைது செய்தனர்.
சென்னை எண்ணூரை சேர்ந்த ரவுடி பி.டி. ரமோஷ் ஒருவாரத்திற்கு முன்பு ரவுடி ரமேஷ் துப்பாக்கியால் சுட்டதில் மற்றொரு ரவுடி செந்தில்குமார் படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் செந்தில்குமார் என்ற ரவுடியை சுட்ட ரவுடி ரமேஷ் போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய ரவுடி அலெக்சாண்டர் என்பவன் தலைமறைவாகி உள்ளான்.
கைதான ரவுடி ரமேஷிடம் இருந்த மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்து போலீஸார், துப்பாக்கிச் சூடு எதற்காக நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.