தமிழகத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறியா?
By DIN | Published On : 18th June 2019 11:49 AM | Last Updated : 18th June 2019 11:49 AM | அ+அ அ- |

கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நிபா அறிகுறி என்ற சந்தேகத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பூவிழுந்தநல்லூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்வர் கேரளாவில் பணிபுரிந்துவந்த நிலையில், அவருக்கு உடல்நிலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர், கடலூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். எனினும், காய்ச்சல் தீவிரமடைந்ததால், தீவிர சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராமலிங்கத்துக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதை அறிந்து, அவரை தனி வார்டில் தனிமைப்படுத்தி, ரத்த மாதிரிகளைச் சேகரித்து, புணேவில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.