Enable Javscript for better performance
பொருளாதார இலக்குகளை அடைய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்பு அவசியம்: நிர்மலா சீதார- Dinamani

சுடச்சுட

    

    பொருளாதார இலக்குகளை அடைய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்பு அவசியம்: நிர்மலா சீதாராமன்

    By DIN  |   Published on : 21st June 2019 06:51 PM  |   அ+அ அ-   |    |  

    Nirmala_Sitharaman


    புது தில்லி: பொருளாதார இலக்குகளை அடைய மத்திய அரசுடன், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

    வரும் 5 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்கிறார். இதற்கான பணிகளில் மும்முரமாக இருக்கும் அவர், துறை வாரியான பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், பட்ஜெட்டுக்கு முன்பு மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறியும் வகையில், மாநில நிதி அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், பொருளாதார வளா்ச்சிக்கு தேவையான வழிமுறைகளை வகுப்பது மத்திய அரசின் பொறுப்பு. அதேசமயம், அவற்றை களத்தில் அமல்படுத்தும் பொறுப்பு மாநிலங்களுக்கு உள்ளது. இதனை உணா்ந்து செயல்பட வேண்டும். 

    மத்திய அரசுடன் ஒற்றுமையாக இணைந்து மாநிலங்கள் பணியாற்றவில்லை எனில் இலக்கை அடைய முடியாது. 

    எனவே, பொருளாதார இலக்குகளை அடைய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்பு என்பது மிக அவசியம். அப்போதுதான் நாம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.

    முன்னெப்போதும் இல்லாத அளவில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கும் நிதி பங்கீடு அண்மை காலத்தில் ரூ.8,29,344 கோடியிலிருந்து ரூ.12,38,274 கோடியாக அதிகரித்துள்ளது.

    13-ஆவது நிதி குழுவில் 32 சதவீதமாக இருந்த மாநிலங்களுக்கான வரி பகிர்வு 14-ஆவது நிதி குழுவில் 42 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது என்று கூறினார். 

    இந்த கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, தமிழகத்திற்கு தேவைப்படும் நிதி குறித்து கோரிக்கைகளை முன்வைத்தார்.

    இதேபோல், பிற மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மாநிலங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp