சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்
By DIN | Published On : 25th June 2019 07:27 AM | Last Updated : 25th June 2019 07:27 AM | அ+அ அ- |

சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்று செவ்வாய்கிழமை (ஜூன் 25) விற்பனையாகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், கடந்த ஒரு வாரமாக குறைந்தும் மாற்றமின்றியும் விற்பனையாகி வந்தன.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.77 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.67.59 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.