முலாயம்சிங் மருத்துவமனையில் அனுமதி
By DIN | Published On : 25th June 2019 08:09 AM | Last Updated : 25th June 2019 08:09 AM | அ+அ அ- |

முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம்சிங் யாதவ் உடல்நல குறைவு காரணமைாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது மூப்பு மற்றும் உடல்நலம் பாதிப்பு காரணமாக முன்னாள் முதல்வர் முலாயம்சிங் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
இந்நிலையில், சிறுநீரக பாதிப்பு காரணமாக குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.