வாருங்கள் வைத்தீஸ்வரன் தாள் பணிவோம்!

காட்டுமன்னார்கோயிலில் இருந்து மேலக்கடம்பூர்- எய்யலூர்  வந்து 13 கிமி-ல் சிறுகாட்டூர் அடையலாம். அல்லது அணைக்கரையில் இருந்து வடவாற்றின்
வாருங்கள் வைத்தீஸ்வரன் தாள் பணிவோம்!


காட்டுமன்னார்கோயிலின்  தென் திசையில் கொள்ளிடம் பேராற்றின் வடகரைக்கும், அணைக்கரையில் இருந்து பிரிந்து வீராணம் செல்லும் வடவாற்றின் தென் புறத்திலும் உள்ள இடைப்பட்ட குறுகிய நிலமே சிறுகாட்டூர். 

காட்டுமன்னார்கோயிலில் இருந்து மேலக்கடம்பூர்- எய்யலூர்  வந்து 13 கிமி-ல் சிறுகாட்டூர் அடையலாம். அல்லது அணைக்கரையில் இருந்து வடவாற்றின்  தென்  கரையில்  வந்தால் 10 கிமி தூரத்தில் சிறுகாட்டுரை அடையலாம். 

இவ்வூர் 26வது தருமையாதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்மந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் பிறந்த ஊராகும்.  

இங்கு அவர்கள் பிறந்த இடத்தில் சுவாமிகள் ஓர் அழகான புதிய கோயில் கட்ட எண்ணியபோது, எம்மக்கள் வினை தீர வைத்தீஸ்வரன் கோயில் போலவே வைத்தியநாதர், தையல் நாயகி கற்பக விநாயகர், செல்வமுத்துகுமரசாமி சன்னதிகள் வைத்து கட்ட இறைவன் சித்தமாக ஆதீனகர்த்தர் முடிவெடுத்தார். 

 தற்போது அவரது எண்ணம் திருப்பணி திலகம்- திருமதி. மகாலட்சுமி அம்மாள் அவர்களின் உழைப்பினால் முழுமையாக ஈடேறி கோயில் குடமுழுக்கு காண இருக்கிறது.
 
 வருகின்ற ஆனி மாதம் 23 8.7.2019 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30க்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது. 

வாத, பித்த, சிலேட்டுமம்
வகைக்கு நூறு நோய்கள்
மனிதகுலம்  அறிகிலாத
புதியநோய் தினம், தினம்
வேதனை வளர்ந்ததன்றி
வென்றதோ மருத்துவம்?

ஆயுர்வேதம், ஆங்கிலம்,
யுனானி, சித்த வைத்தியம்,
ஆனவேறு வகையிலும்
அநேகமான பத்தியம்
பாழும்  நோய் போனதோ?

எல்லா பிணியும் உனையல்லால் 
யாரால் தீர்க்க இயலும் 
வாரும் எம்பெருமானே இந்த 
சிறு காட்டூர் மண்ணுக்கு. 
எம் மக்கள் நோயின்றி வாழ அருளுங்கள்.

வாருங்கள் வைத்தீஸ்வரன் தாள் பணிவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com