சுடச்சுட

    

    மதுரையில் தனியார் பள்ளி பால்கனி இடிந்து விழுந்து விபத்து: 3 மாணவர்கள் காயம்

    By DIN  |   Published on : 26th June 2019 10:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    மதுரையில் தனியார் பள்ளியின் பால்கனி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில், கீழே நின்ற 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 

     மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான பள்ளியின் பால்கனி தடுப்புச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. 

    இந்த விபத்தில் பிளஸ் 1 படித்து வரும் வீரக்குமார், சக்திவேல், குமாரவேல் என 3 மாணவர்கள் காயமடைந்தனர்.  

    இதையடுத்து பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

    இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai