சுகாதாரத்தில் சாதிக்கும் கேரளா! சரியும் தமிழகம்: நிதி ஆயோக் அதிர்ச்சி ஆய்வறிக்கை

தரவரிசைப் பட்டியலில் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் இறப்பு
சுகாதாரத்தில் சாதிக்கும் கேரளா! சரியும் தமிழகம்: நிதி ஆயோக் அதிர்ச்சி ஆய்வறிக்கை



சுகாதாரத்தில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மீண்டும் கேரளா முதலிடம் வகிக்கிறது, படுமோசமான மாநிலம் உத்தரப்பிரதேசமும், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு வீழ்ச்சியடைந்து வருவதாக நிதி ஆயோக் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் மத்திய நிதி ஆயோக் ஆண்டுதோறும் சுகாதாரம் தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
 
நோய்கள் வருமுன் காத்தால், விழிப்புணர்வு உண்டாக்குதல், வந்த பின்னர் மேலும் பரவாமல் தடுத்தல், கட்டுப்படுத்தி, குணப்படுத்த அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள். யூனியன் பிரதேசங்கள் என 3 பிரிவுகளில் சுகாதார செயல் திறன் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு "ஆரோக்கியமான நாடுகள், முன்னேறும் இந்தியா" என்ற தலைப்பில் தரவரிசை படுத்தி நிதி ஆயோக் பட்டியல் வெளியிடுகிறது. 

2016 மற்றும் 2018 க்கு இடையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் குறித்து இந்த அறிக்கை வரிசைப்படுத்துகிறது.

அந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த 2015-16 ஆண்டுகளை அடிப்படையாக வைத்து 2017-18 ஆண்டுகளை மேற்கோளாக காட்டி இந்த ஆண்டு வெளியான அறிக்கையில், சுகாதாரத்தை பொருத்தமட்டில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில் மீண்டும் கேரளா முதலிடம் பெற்றுள்ளது. கேரளாவுக்கு அடுத்தபடியாக முதல் மூன்று இடங்களை ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா இடம்பெற்றுள்ளன. குஜராத் நான்காவது இடத்துக்கும், பஞ்சாப் ஐந்தாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத்தில் மிக மோசமான மாநிலமாக உத்தரப்பிரதேசம், பிகார், ஒடிசா மாநிலங்கள் உள்ளன. கடந்த ஆண்டு 3-வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது. 

தரவரிசைப் பட்டியலில் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் இறப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பிப்ரவரி 2019 வரை கிடைக்கும் தரவுகளின்படி, 73,721 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும்,   ஒரு வயதிற்குட்பட்ட 1,829 குழந்தைகளும், ஐந்து வயதுக்குட்பட்ட 551 குழந்தைகளும் ஏற்கனவே ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

குறைந்த பிறப்பு எடை மற்றும் முழு நோய்த்தடுப்பு பாதுகாப்பு போன்ற குறியீட்டுகளில் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் மேம்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு மோசமடைந்துள்ளதால் தரவரிசையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிறக்கும் 1000 குழந்தைகளில் 2.5 கிலோவிற்கும் எடை குறைவான குழந்தைகளே பிறக்கின்றன. 

பெரிய மாநிலங்களில் ஆண்டுக்கான செயல் திறன் அதிகரிப்பில் ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் அசாம் ராஜஸ்தான் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் சத்தீஸ்கர் குறைந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

சிறிய மாநிலங்களில் வரிசையில் மிசோரமும், யூனியன் பிரதேசங்களில் சண்டிகார் முதலிடம் பெற்றுள்ளது.

சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்கள் பாலின விகிதம், காசநோய் கட்டுப்படுத்துவது தொடர்பான சிகிச்சையில் மோசமான நிலையிலே உள்ளன. 

பாலின விகிதத்தில் மாநிலங்களின் செயல்திறனில் ஆச்சரியங்கள் உள்ளன. தற்போது சத்தீஸ்கரில் பாலின விகிதம் 963 ஆக உள்ளது. கேரளாவின் பாலின விகிதம் 967-ல் இருந்து 959 ஆக குறைந்துள்ளது. ஹரியானாவின் பாலின விகிதம் 832 ஆக உள்ளது, இருப்பினும் இது 831-இல் இருந்து சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. உத்திரப்பிரதேசம் 879-ல் இருந்து 882க்கு முன்னேறியுள்ளது.

இந்திய விவசாயிகள் முன்பை விட அதிகமான உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறார்கள். கடந்த இரண்டு தசாப்தங்களில் உணவு தானிய விளைச்சல் 33% அதிகரித்துள்ளது. ஆனால் 2030 இலக்கு விளைச்சலில் பாதிதான் என்றும், விவசாயிகள் நாட்டை தன்னிறைவு பெறச் செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, மக்கள் தொகை வளர்ச்சி, சமத்துவமின்மை, உணவு விரயம் மற்றும் இழப்புகள் மற்றும் ஏற்றுமதிகள் காரணமாக அரிசி, கோதுமை மற்றும் பிற தானியங்களுக்கான நுகர்வோர் அணுகல் ஒரே விகிதத்தில் அதிகரிக்கவில்லை.

இதன் விளைவாக, ஏழ்மையான 30% மக்களிடையே சராசரி தனிநபர் ஆற்றல் நுகர்வு 1811 கிலோ கலோரிகள் என்றும், இது ஒரு நாளைக்கு 2155 கிலோ கலோரிகளின் அளவை விட மிகக் குறைவு என தெரிவித்துள்ளது.

பிகார் (48%) மற்றும் உத்தரப்பிரதேசம் (46%) போன்ற மாநிலங்களில், கிட்டத்தட்ட இரண்டு குழந்தைகளில் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் கேரளா மற்றும் கோவாவில் ஐந்து குழந்தைகளில் ஒருவர் மட்டுமே ( 20%). பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு பற்றிய பகுப்பாய்வின்படி. ஐந்து வயதிற்குட்பட்ட மூன்று இந்திய குழந்தைகளில் கிட்டத்தட்ட ஒருவர் 2022 ஆம் ஆண்டில் தற்போதைய போக்குகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும்
2022 ஆண்டுக்குள் 31.22% குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் இந்தியா 25% இலக்கை அடைய அதன் முன்னேற்ற விகிதத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசைகளின் முழு பட்டியல் பின்வருமாறு:
1. கேரளா
2. ஆந்திரா
3. மகாராஷ்டிரா
4. குஜ்ராத்
5. பஞ்சாப்
6. இமாச்சலப் பிரதேசம்
7. ஜம்மு-காஷ்மீர்
8. கர்நாடக
9. தமிழ்நாடு
10. தெலுங்கானா
11. மேற்கு வங்கம்
12. ஹரியானா
13. சத்தீஸ்கர்
14. ஜார்கண்ட்
15. அசாம்
16. ராஜஸ்தான்
17. உத்தரகண்ட்
18. மத்தியப் பிரதேசம்
19. ஒடிசா
20. பிகார்
21. உத்தரபிரதேசம்

சுகாதார முடிவுகள், ஆட்சி மற்றும் செயல்முறைகள் மற்றும் கொள்கை தலையீடுகளின் தாக்கம் ஆகியவற்றை இந்த அறிக்கை கவனத்தில் கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com