சுடச்சுட

  

  ஒசாமா பின்லேடன் மகன் குறித்து தகவல் தெரிவித்தால் 1 மில்லியன் டாலர் பரிசு: அமெரிக்கா

  By DIN  |   Published on : 01st March 2019 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  osama-bin-ladens-son-hamza-bin-laden


  மறைந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஜா பின்லேடன் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் (ரூ.7.08 கோடி)  பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 

  கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்  உலகையே அதிர வைத்தது.  இந்த தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை, சுமார் 10 ஆண்டுகளுக்கு தேடுதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க ராணுவம் அதிரடியாக சுட்டுக் கொன்றது. 

  இதனைத்தொடர்ந்து ஒசாமாவின் 3 மனைவிகள் மற்றும் அவரது மகன்கள் சுவுதி அரேபியா திரும்புவதற்கு அனுமதி அளித்தது.  ஆனால் பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன்(30) அல்கொய்தாவின் முக்கிய தலைவராக மாறினான். பின்லேடன் கொல்லப்பட்டு 8 ஆண்டுகள் கடந்த நிலையில் ஹம்சா பின்லேடன் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளை இணைத்து பேர்ச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதனால் ல் ஹம்சா பின்லேடனை அமெரிக்க தீவிரமாக தேடி வருகிறது. 

  இந்நிலையில், ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.7.08 கோடி) பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 

  வாஷிங்டனில் இதனை அறிவித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி மைக்கல் இவானாஃப்,  பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அல்லது சிரியா எல்லையில் பதுங்கியிருக்கலாம் என்றும்,  ஹம்சா பின்லேடன் ஈரானுக்கு தப்பி செல்லக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார். 

  ஹம்சா பின்லேடனை சர்வதேச பயங்கரவாதி என தெரிவித்த மைக்கல் இவானாஃப்,   அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஹம்சா பின்லேடன் உத்தரவிட்டு ஆடியோ மற்றும் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai