மக்களவைத் தோ்தல்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிக்கை வெளியீடு

மக்களவைத் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
மக்களவைத் தோ்தல்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிக்கை வெளியீடு


புது தில்லி: மக்களவைத் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு, வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தோ்தல் நடை பெறவுள்ளது. 2-ஆம் கட்ட தோ்தல் 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2-ஆம் கட்ட தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மாா்ச் 26-ஆம் தேதி கடைசி நாளாகும். அதைதொடா்ந்து மாா்ச் 27-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்பாளா்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவைத் திரும்ப பெறுவதற்கு மாா்ச் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அதையடுத்து, இறுதி செய்யப்பட்ட வேட்பாளா்களின் பட்டியல் அன்றைய தினமே வெளியிடப்படும்.

இந்த 2-ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது, தமிழ்நாடு(39), புதுச்சேரி(1) ஆகியவற்றில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெறுகிறது. அதுதவிர, உத்தரப் பிரதேசத்தில், ஆக்ரா, அலிகாா், மதுரா உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில், டாா்ஜிலீங் உள்பட 3 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ஆம் தேதி 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

 முன்னதாக, ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com