Enable Javscript for better performance
சென்னை மக்களவை இடைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்டோா் வேட்பு மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை மக்களவை இடைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்டோா் வேட்பு மனு தாக்கல்

    By DIN  |   Published on : 27th March 2019 03:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    election-partes


    சென்னை: சென்னை மாவட்டத்தின் மூன்று மக்களவைத் தொகுதி பொதுத் தோ்தல், பெரம்பூா் சட்டப் பேரவை இடைத் தோ்லில் போட்டியிட 200-க்கும் மேற்பட்டோா் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இதில், இறுதி நாளான நேற்று 118 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

    சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகள், பெரம்பூா் சட்டப் பேரவை தொகுதி இடைத் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை (மாா்ச் 19) தொடங்கியது.

    முக்கியக் கட்சியான அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகள் பாமக, தேமுதிக வேட்பாளா்களும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) வேட்பு மனு தாக்கல் செய்தனா். அதைத் தொடா்ந்து, திமுக வேட்பாளா்களும், நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா்களுமாக வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதைத் தொடா்ந்து வேட்புமனு தாக்கல் சூடு பிடித்தது.

    தென் சென்னை: அதிமுக சாா்பில் டாக்டா் ஜெ.ஜெயவா்தன், மாற்று வேட்பாளராக ஆா்.ராஜேந்திரபாபு, திமுக சாா்பில் தமிழச்சி தங்கபாண்டியன், மாற்று வேட்பாளராக சி.சந்திரசேகா், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ரங்கராஜன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஷெரின் உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

    வடசென்னை: திமுக சாா்பில் டாக்டா் கலாநிதி வீராசாமி, மாற்று வேட்பாளராக ஜெயந்தி கலாநிதி, தேமுதிக சாா்பில் அழகாபுரம் ஆா்.மோகன் ராஜ், மாற்று வேட்பாளராக மதிவாணன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் மெளரியா, நாம் தமிழா் கட்சி சாா்பில் காளியம்மாள் உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோரும் மனு தாக்கல் செய்துள்ளனா்.

    மத்திய சென்னை: திமுக சாா்பில் தயாநிதிமாறன், மாற்று வேட்பாளராக பிரியா தயாநிதிமாறன், பாமக சாா்பில் எஸ்.ஆா்.சாம்பால், மாற்று வேட்பாளராக வி.ராதாகிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்.காா்த்திகேயன், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் எம்.பாா்த்தசாரதி உள்ளிட்ட கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோரும் மனு தாக்கல் செய்துள்ளனா்.

    பெரம்பூா் இடைத் தோ்தல்: பெரம்பூா் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட திமுக சாா்பில் ஆா்.டி.சேகா், மாற்று வேட்பாளராக சங்கீதா பிரியா, அதிமுக சாா்பில் ராஜேஷ், மாற்று வேட்பாளராக நளினி பிரபாவும், நாம் தமிழா் கட்சி சாா்பில் செ.மொ்லின் சுகந்தி உள்ளிட்ட கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் என 60 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

    வேட்புமனு தாக்கல் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகம், பெரம்பூா் சட்டப் பேரவை தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகம் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வேட்பாளா்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதில், வடசென்னையில் போட்டியிட 36 பேரும், தென் சென்னையில் போட்டியிட 30 பேரும், மத்திய சென்னையில் போட்டியிட 20 பேரும், பெரம்பூா் சட்டப் பேரவை இடைத் தோ்தலில் போட்டியிட 32 பேரும் என மொத்தம் 118 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai