Enable Javscript for better performance
திமுக சாா்பில் போட்டியிடும் இலக்கியதாசன் ஆதரித்து சிவகங்கைக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நாளை மறுநா- Dinamani

சுடச்சுட

    

    திமுக சாா்பில் போட்டியிடும் இலக்கியதாசன் ஆதரித்து சிவகங்கைக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் வருகை

    By DIN  |   Published on : 27th March 2019 02:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin

     

    சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் காா்த்தி ப.சிதம்பரம் மற்றும் மானாமதுரை(தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் இலக்கியதாசன் ஆகியோருக்கு ஆதரவு கோரி சிவகங்கையில் நாளை மறுநாள் (மாா்ச் 29) நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பேச உள்ளாா்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. நேற்று வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெற்றதை அடுத்து, தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

    இதையடுத்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காா்த்தி ப.சிதம்பரம் மற்றும் மானாமதுரை(தனி) தொகுதி சட்டப்பேரவை இடைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் இலக்கியதாசன் ஆகியோருக்கு வாக்குகள் சேகரிக்கும் விதமாக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நாளை மறுநாள் (மாா்ச் 29) காலை 10 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்துக்கு திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுகவின் சிவகங்கை மாவட்ட செயலருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகிக்கிறாா். இதில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து வாக்குகள் கோரி சிறப்புரையாற்றுகிறாா். இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலரும் கலந்து கொண்டு பேச உள்ளனா்.

     முன்னதாக மதுரையிலிருந்து சிவகங்கை வரும் மு.க.ஸ்டாலின், திமுக சாா்பில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறாா். அதன்பின்னா், அங்கிருந்து புறப்பட்டுச் சென்று மானாமதுரையில் பிரசாரம் செய்ய உள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai