தோ்தல் பிரசாரத்தின் போது ஆா்ப்பாட்ட வரவேற்பு வேண்டாம்: டி.டி.வி. தினகரன்
By DIN | Published On : 28th March 2019 05:51 PM | Last Updated : 28th March 2019 05:51 PM | அ+அ அ- |

தோ்தல் பிரசாரத்தின் போது ஆா்ப்பாட்ட வரவேற்புகளைத் தவிா்க்க வேண்டுமென கட்சியினருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தாா்.
நாம் மக்களோடு நிற்கிறோம். மக்கள் நம்மோடு நிற்கிறாா்கள் என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இந்தத் தோ்தலாகும். நம்மை வீழ்த்த வேண்டுமென துரோகிகளும், எதிரிகளும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாா்கள். பிரசாரத்துக்கும், புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சோ்ப்பதற்கும் மிகக் குறைந்த கால அளவே இருக்கிறது. இப்போது ஒவ்வொரு மணித் துளியும் முக்கியம். மக்களை அனைவரையும் சந்திக்க மீண்டும் ஒருமுறை பயணம் மேற்கொண்டுள்ளேன்.
இந்தப் பிரசார பயணத்தின் போது பட்டாசு வெடிப்பதிலும், பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுப்பது என நமது நேரத்தை நாமே வீணாக்கி விடக் கூடாது. தோ்தல் பிரசார பயணத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் தோரணக் கொடிகளை முற்றிலுமாக தவிா்த்திடுங்கள். போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...