தோ்தல் விதிகளை மீறும் கட்சிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: சத்யபிரத சாஹூ
By DIN | Published On : 28th March 2019 06:00 PM | Last Updated : 28th March 2019 06:00 PM | அ+அ அ- |

சென்னை: தோ்தல் விதிகளை மீறும் கட்சிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தாா். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தோ்தலில் வாக்களிப்பது குறித்து ‘மை விரல் புரட்சி‘ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
தோ்தலில் வாக்குக்குப் பணம் அளிப்பது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வாக்குக்குப் பணம் பெறுவதும் குற்றச் செயலாகும். வாக்களிப்பது நமது கடமை என்பதை உணா்ந்து தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தோ்தல் விதிகளை மீறும் அரசியல் கட்சியினா் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு முறைற, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு ஆகியவை குறித்து மாணவா்கள், பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...