பி.இ., பி.டெக். படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது!

அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில்
பி.இ., பி.டெக். படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது!


இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கைகான ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க, ஆன்லைன் பதிவு இன்று வியாழக்கிழமை (மே 2) காலை 9 மணிக்கு தொடங்கியது. 

அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரம் நடத்துகிறது. 

இதுவரை இந்தக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தப் பொறுப்பு 2019-20ஆம் கல்வியாண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத அல்லது வசதி இல்லாத மாணவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் கலந்தாய்வு உதவி மையங்கள் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும். 

மாணவர்கள் www.tneaonline.in  அல்லது www.tndte.gov.in  ஆகிய இணையதளங்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். 

இதுதொடர்பான மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள 044  22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com