முகப்பு தற்போதைய செய்திகள்
ஏர் இந்தியா மூத்த அதிகாரி மீது பெண் விமானி பாலியல் புகார்: விசாரணைக்கு உத்தரவு
By ANI | Published On : 15th May 2019 08:53 AM | Last Updated : 15th May 2019 08:54 AM | அ+அ அ- |

ஏர் இந்தியாவின் மூத்த கமாண்டர் மீது பெண் விமானி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளைதை அடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது ஏர் இந்தியா நிர்வாகம்.
மே 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் விமானியை மூத்த கமாண்டர் உணவருந்த அழைத்ததாகவும், தம்மிடம் தகாத கேள்விகள் கேட்டு பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும், அத்துமீறியதாக அந்த பெண் விமானி புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக ஏர் இந்தியா நிர்வாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Air India spokesperson: Air India has set up an enquiry against its senior captain on sexual harassment case after receiving a complaint from a woman pilot.