முகப்பு தற்போதைய செய்திகள்
22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
By DIN | Published On : 15th May 2019 11:55 AM | Last Updated : 15th May 2019 01:04 PM | அ+அ அ- |

சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உத்தரவில், அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் 537 பொறியியல் கல்லூரிகளில், 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் அனுமதியை புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை.
இதயைடுத்து அந்த கல்லூரிகளில் புதியதாக இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 92 பொறியியல் கல்லூரிகள் பாடத்திட்டங்களுக்கான முறையான உட்கட்டமைப்பு வசதி, ஆய்வக வசதி, போதிய தகுதியான பேராசிரியர்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனால் 92 கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், 50 சதவீதம் மாணவர் சேர்க்கையை குறைக்க அண்ணா பல்கலை உத்தரவிட்டது.
300 பாடப்பிரிவுகளில் 15 ஆயிரம் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.