முகப்பு தற்போதைய செய்திகள்
அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
By DIN | Published On : 15th May 2019 10:18 AM | Last Updated : 15th May 2019 10:18 AM | அ+அ அ- |

ஜூனோ: அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதிதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் அலாஸ்கா மகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கெட்சிகன் நகரில் தண்ணீரிலும் இறங்கும் விமானங்கள் மூலம் பனிப்பரப்பை ரசிக்க பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கம். இதே போல கனடாவின் ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் வந்த பயணிகளை இரு கடல் விமானங்களில் அழைத்துச் சென்றனர்.
விமானங்கள் மீண்டும் கெட்சிகன் நகருக்கு திரும்பி வந்த போது, எதிர்பாரதவிதமாக இரு விமானங்களும் மோதிக்கொண்டன. இதில் 11 பேருடன் சென்ற ஒரு விமானத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர். அதே போன்று 5 பேருடன் சென்ற மற்றொரு விமானத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இருவரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. மாயமான 2 பேரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காயமடைந்த 10 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.