மேற்கு வங்கத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது ஏன்? பிரதமர் மோடி கேள்வி

தேர்தல் நேரத்தில் மேற்கு வங்கத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது ஏன்? என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். 
மேற்கு வங்கத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது ஏன்? பிரதமர் மோடி கேள்வி


தேர்தல் நேரத்தில் மேற்கு வங்கத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது ஏன்? என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கொல்கத்தாவின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அப்போது வித்யாசாகர் கல்லூரி விடுதியில் மறைந்திருந்த ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், பேரணியில் பங்கேற்றவர்களை நோக்கி சரமாரியாக கற்களை வீசினர். 

இதையடுத்து, பாஜக ஆதரவாளர்கள் அவர்களை விரட்டத் தொடங்கினர். இதில் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் காயம் ஏதுமின்றி அமித் ஷா தப்பினார். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி வன்முறையாளர்களைக் கலைத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கொல்கத்தாவில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.

அப்பகுதியில் இருந்த இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

இதனால், பேரணி பாதியிலேயே முடிவுக்கு வந்தது. இந்த வன்முறையால் கொல்கத்தா நகரம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடந்த தாக்குதலுக்கு மம்தாவின் தோல்வி பயமே காரணம் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், பாஜக பேரணியின்போது கொல்கத்தாவில் நடந்த வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? கேள்வி எழுப்பியுள்ள மோடி, தேர்தல் நேரத்தில் மேற்கு வங்கத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது ஏன்? இதுகுறித்து நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொள்வோர் ஏன் வாய்திறக்கவில்லை? என்றும் காஷ்மீரில் கூட தேர்தல் அமைதியாக நடக்கும்போது மேற்கு வங்கத்தில் வன்முறை வெடிக்கக் காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com