பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்: அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்: அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு பிஇ, பி.டெக் பொறியில் படிப்புக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 2 ஆம் தேதி துவங்கி வரும் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 20 ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

அதாவது, 2018 ஆம் ஆண்டு கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் இந்த தர வரிசை பட்டியலை அண்ணா பல்கலைகழகம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சேலம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி, கோவை பிஎஸ்ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, நாமக்கல் விவேகானந்தா இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் ஆகியவை முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்களில், தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரி மாணவர்கள் எழுதிய தேர்வில், 6 கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய 682 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 74 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்க விகிதத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 150 கல்லூரிகள் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், நவம்பர் மாத தேர்வு முடிவுகளில் தரமான கல்லூரிகள் என சான்றளிக்கப்பட்ட 59 கல்லூரிகள் மட்டுமே 50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மிகவும் தரமான கல்லூரிகள் என வகைப்படுத்தப்பட்ட கல்லூரிகளில் மட்டும் 85.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

482 பொறியியல் கல்லூரிகளில் 422 கல்லூரிகள் 50 சதவீதத்திற்கும் கீழ் தேர்ச்சி பெற்றுள்ளன. 177 கல்லூரிகளில் 50 - 25 சதவீதத்திற்கும் இடைப்பட்ட தேர்ச்சியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தேர்வு முடிவுகள் தமிழகத்தில் பொறியியல் கல்வியை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும், அவசரத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ள நிலையில்,  தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்புகள் வசதிகள், ஆசிரியர்கள் இல்லாத சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக் கழகம் நேற்று அதிரடியாக அறிவித்தது. 

மாணவர்களே உஷார்: மேற்கண்ட முடிவுகளைக் கொண்டு கல்லூரிகளில் கற்பிக்கும் திறன், போதிய அளவிற்கு பேராசிரியர்கள் உள்ளனரா என்பதை மாணவர்கள் ஆய்தறிந்து நடப்பு ஆண்டுக்கான கலந்தாய்வில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இந்த தரவரிசைப் பட்டியல் உதவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com