முகப்பு தற்போதைய செய்திகள்
ரயில்களில் நகை திருடியவர் கைது
By DIN | Published On : 18th May 2019 06:52 AM | Last Updated : 18th May 2019 06:52 AM | அ+அ அ- |

சென்னை: ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிகளிடம் தொடர் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த ஹோட்டல் இயக்குநரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 சவரன் நகையை மீட்டனர்.
சென்ட்ரல் ரயில்நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி ஒருவர் சந்தேகத்துக்குக்கிடமாக நடமாடிக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சாகுல் ஹமீது(39) என்பது தெரியவந்தது. இவர் குளிர்சாதனப் பெட்டியில் முன்பதிவு செய்து பயணம் செய்வார். குறிப்பாக பெண் பயணிகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நகைகளை திருடி விற்று, அந்த பணத்தில் மலேசியாவில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இது குறித்து ரயில்வே போலீஸார் கூறியது: சாகுல் ஹமீது மீது 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரிடம் இருந்து 110 சவரன் நகை பறிமுதல் செய்தனர். குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீஸாரை ரயில்வே காவல் டிஐஜி பாலகிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் ஆகியோர் பாராட்டினர்.